iPhone 13 ஆனது பிளிப்கார்ட்டில் சிறந்த அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கிடைக்கிறது. ரூ.79,900க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 13 ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.64,999 என கிடைக்கிறது. ஆனால் முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 விலை ரூ.4901 குறைக்கப்பட்டிருக்கிறது.Apple iPhone 13 ஆனது 2021 இல் ரூ.79,900 என அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் உடன் குறைந்த விலையில் வாங்கலாம். ஐபோன் 13 ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.4901 என்ற விலைக் குறைப்புடன் ரூ.64,999 என பட்டியலிடப்பட்டிருக்கிறது. கூடுதல் சலுகைகளுடன் இந்த ஐபோன் மாடலை குறைந்த விலையில் வாங்கலாம்.

இந்த ஐபோனை ஃபெடரல் வங்கி டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது ரூ.5000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல் பிளிப்கார்ட்டில் ரூ.22,500 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது மொத்தமாக பிளிப்கார்ட்டில் ஐபோன் 13க்கு ரூ.28,901 என தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஐபோன் 13 மாடலை ரூ.40,999 என வாங்கலாம்.
ஐபோன் 13 சிறப்பம்சங்கள்
ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூபப்ர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது. நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா. இதன் டிஸ்ப்ளே ஆனது சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஐஓஎஸ் 15 மூலம் இந்த ஐபோன் இயக்கப்படுகிறது.

ஐபோன் 12 மினி தள்ளுபடி
அதேபோல் ஆப்பிள் ஐபோன் 12 மினி பிளிப்கார்ட் இல் மலிவான விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஐபோன் 12 மினி மாடல் ஆனது ரூ.43,999 என கிடைத்த நிலையில் தற்போது ரூ.35,000 என கிடைக்கிறது. ஐபோன் 12 மினி விலையானது தற்போது ரூ.37,999 என பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.
வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.வங்கி சலுகைகள்
அதாவது சிட்டி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்தால் கூடுதலாக ரூ.1500 வரை அதாவது 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. இதன்மூலம் ஐபோன் 12 மினியை ரூ.36,499 என வாங்கலாம். பிளிப்கார்ட்டில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த போனை ரூ.20,000க்கு கீழ் வாங்கலாம்.

ஐபோன் 12 மினி சிறப்பம்சங்கள்
ஐபோன் 12 மினி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த மாடல் ஆனது 2020 இல் அறிமுகமானது. ஐபோன் 12 மினி ஆனது சிறிய 5.4 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்பட்டது. முழு எச்டி+ தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டுள்ளது இதன் டிஸ்ப்ளே.

12எம்பி ரியர் கேமரா
ஐபோன் 12 மினி மாடலில் 12 எம்பி பிரதான லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. செல்பி கிளிக் செய்வதற்கு என இதன் முன்புறத்தில் 12 எம்பி கேமரா இருக்கிறது. பின்புற கேமரா மூலம் 4கே வீடியோக்களை 60fps வரை படம் எடுக்கலாம். ஸ்லோ மோஷன் வீடியோ ஆதரவும் இதில் இருக்கிறது.
ஏ14 பயோனிக் சிப்செட்
ஐபோன் 12 மினி ஆனது ஏ14 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. பிற 12 மாடல்களிலும் இதே ஏ14 பயோனிக் சிப்செட் தான் இருக்கிறது. ஆழமான பயன்பாடுகளையும் இந்த போனில் எளிதாக செய்யலாம். பேட்டரியை பொறுத்தவரை, இதில் சிறிய செல் இருக்கிறது. வேகமான சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடனான 2227 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.
Apple TV
Apple TV 4K (2022) என்பது இந்த ஆண்டின் சிறந்த கேஜெட்களில் ஒன்றாகும். இது மிகவும் துல்லியமான மற்றும் ஹேங் ஆகாத சாஃப்ட்வேர் ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது. முதலில் ஆப்பிள் டிவி என்றதும் இதை டிவி என்று தான் பலரும் நினைக்கின்றனர். இது பக்கா ஸ்ட்ரீமிங் சாதனமாகும். விலையுயர்ந்த ஸ்ட்ரீமிங் சாதனங்களில் இது பிரதான ஒன்றாகும்.

Apple TV 4K (2022) என்பது Dolby Vision மற்றும் HDR10 போன்ற மேம்பட்ட வீடியோ வடிவங்களை இயக்கும் திறன் கொண்ட சக்தி வாய்ந்த ஸ்ட்ரீமிங் சாதனமாகும். இதன் விலை ரூ.14,900 ஆகும். ஆப்பிள் டிவியின் பயன்பாடு மற்றும் சிறப்பம்சம் குறித்து பார்க்கலாம்.
ஏன் ஆப்பிள் டிவி வாங்க வேண்டும்?
ஆப்பிள் என்றால் விலை உயர்வு தான் என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்து சாதனங்களில் இருந்தும் இது தனித்து நிற்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இதே போன்ற பயன்பாடு கொண்ட அமேசான் ஃபயர் ஸ்டிக் மற்றும் கூகுள் க்ரோம் காஸ்ட் ஆப்பிள் டிவியை விட பாதி விலையில் கிடைக்கிறது. அப்படி இருக்கும் போது ஏன் ஆப்பிள் டிவியை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேள்வி வரலாம். பதில் இருக்கிறது.
Apple TV 4K (2022) சிறப்பம்சங்கள்
Apple TV 4K (2022) பயன்பாட்டை ஆண்ட்ராய்ட் போன்ற ஸ்மார்ட்டிவிகளுடன் இணைக்கும் போது ஏறத்தாழ தியேட்டர் தர அனுபவத்தை பெறலாம். இது வேகமான செயல்திறன் மற்றும் முடிவில்லா பொழுதுபோக்கு விருப்பங்களை வழங்குகிறது.
Apple TV 4K என்பது டிடிஎச் பாக்ஸ் போன்ற சாதனம் ஆகும். இதில் கேபிள் டிவிகள் ஆதரவு கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இருப்பினும் சன் நெக்ஸ்ட், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு அணுகலை பெறலாம். கேம்களும் இதில் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 சீரிஸை இயக்கும் அதே ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் தான் Apple TV 4K சாதனமும் இயக்கப்படுகிறது. ஆப்பிள் டிவி டால்பி விஷனுடன் கூடிய HDR 10+ ஆதரவைக் கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட் ஹோம் அக்சஸெரீஸ்
Apple TV 4K ஆனது இரண்டு கட்டமைப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Apple TV 4K (Wi-Fi) ஆனது 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. Apple TV 4K இல் Wi-Fi + Ethernet, வேகமான நெட்வொர்க்கிங் மற்றும் ஸ்ட்ரீமிங்கிற்கான கிகாபிட் ஈதர்நெட்டிற்கான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஹோம் அக்சஸெரீஸ்கள் உடன் இந்த சாதனத்தை இணைக்க முடியும்.

4கே தர வீடியோ ஆதரவுடன் டால்பி சவுண்ட்
ஆப்பிள் டிவி 4கே ஆனது பயனர்களுக்கு பிடித்தமான பல பொழுதுபோக்கு அம்சத்தை வீட்டில் இருந்தபடியே அணுகலாம். மிகப் பெரிய திரையில் 4கே தர வீடியோவை இதன்மூலம் பெற முடியும். பெரிய அளவு டிஸ்ப்ளே உள்ள டிவிகளை வாங்கிவிட்டு அதற்கு ஏற்ப செட்டாப் பாக்ஸ் கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்களுக்கு இந்த சாதனம் வரப்பிரசாதமாக இருக்கும். 4கே தர வீடியோ ஆதரவுடன் டால்பி சவுண்ட் வெளியீடும் கிடைக்கும். உங்களிடம் யமஹா போன்ற சிறந்த ஆம்ப்ளிஃபயர்கள் இருந்தால் இந்த சாதனத்தின் மூலம் வேற லெவல் சவுண்ட் அவுட்புட்டை பெறலாம்.
அதிக சக்தி வாயந்த அம்சங்கள்
முந்தைய மாடல் ஆப்பிள் டிவி 4கே சாதனத்தை விட பல மடங்கு அதிக சக்தி வாயந்த அம்சங்கள் உடன் இது வெளியாகி இருக்கிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பக்கூடிய பல பொழுதுபோக்கு அம்சங்களை ஆப்பிள் டிவி 4கே மூலம் அனுபவிக்கலாம்.
Apple TV HD
இந்த சிரி ரிமோட் ஆனது முந்தைய தலைமுறையின் அதே வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது. யூஎஸ்பி டைப்-சி போர்ட் மூலம் இதை சார்ஜ் செய்யலாம். இந்த Siri ரிமோட் ஆனது அனைத்து தலைமுறை Apple TV 4K மற்றும் Apple TV HD ஆகியவற்றுக்கும் இணக்கமானது. கேம்கள் போன்ற பயன்பாடுகளுக்கு இந்த ரிமோட் சிறந்த அனுபவத்தை அளிக்கும்.

50 சதவீதம் அதிக செயல்திறன்
முந்தைய தலைமுறை ஆப்பிள் டிவி 4கேவை விட இது 50 சதவீதம் அதிக செயல்திறன் வேகத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்னாப்பியர் யுஐ அனிமேஷன் ஆதரவு இதில் இருக்கிறது. HDR10+ ஆதரவுடன் சிறந்த காட்சி தரத்தை வழங்குகிறது. துடிப்பான வண்ணங்கள், துல்லியமான காட்சிகள் என டிவியின் அனுபவம் மேம்பட்டு இருக்கும். Dolby Atmos, Dolby Digital 7.1 மற்றும் Dolby Digital 5.1 சரவுண்ட் சவுண்டுடன் கூடிய ஹோம் தியேட்டர் அனுபவத்தை இதில் பெறலாம்.
என்னதான் விலை உயர்ந்த ஸ்மார்ட் டிவி வாங்கினாலும் அதை இயக்குவதற்கு ஸ்ட்ரீமிங் மற்றும் டிஷ் பாக்ஸ் ஆதரவு பிரதானம். நீங்கள் எத்தனை விலை உயர்ந்த ஸ்மார்ட்டிவியை வாங்கினாலும் அதற்கு இதுபோன்ற ஸ்ட்ரீமிங் பாக்ஸ் என்பது பிரதான ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.