Skip to content
Techbuddiess

TECHBUDDIESS

Technology | Gadgets | Affiliate Marketing | Digital Marketing

  • MOBILES
  • TV
  • COMPUTERS & LAPTOP
  • GADGETS
  • CINEMA NEWS
  • Home
  • 2022
  • December
  • 9
  • இந்தியர்கள் இந்த மாதிரி விசயங்களை தான் google -ல் தேடினார்களா.! Google வெளியிட்ட வெளியிட்ட உண்மை!!
Indians google sarching history 2022

இந்தியர்கள் இந்த மாதிரி விசயங்களை தான் google -ல் தேடினார்களா.! Google வெளியிட்ட வெளியிட்ட உண்மை!!

Posted on December 9, 2022December 9, 2022 By admin No Comments on இந்தியர்கள் இந்த மாதிரி விசயங்களை தான் google -ல் தேடினார்களா.! Google வெளியிட்ட வெளியிட்ட உண்மை!!
Uncategorized

2022 Google ட்ரெண்டிங் தேடல் முடிவுகளை கூகுள் வெளியிட்டுள்ளது. பொதுவாக நமக்கு ஏதாவது சந்தேகம் என்றால் அதை கூகுள் இடம் கேட்போம். அப்படி இந்தியர்கள் 2022 ஆம் ஆண்டில் அதிக தெரிந்துக் கொள்ள விரும்பிய விஷயங்கள் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.


சிறந்த தேடல்களின் முடிவுகள் கூகுள் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த தேடல்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஆண்டு முழுவதும் வைரலாகி நாட்டின் தலைப்பு செய்திகளாக மாறிய விஷயங்கள் தான் இடம்பெற்றுள்ளன. கூகுள் ஒவ்வொரு நாடுகளுக்கும் அந்தந்த நாடுக்கு தகுந்தது போல் பட்டியலை வெளியிடுகிறது. அதேபோல் தற்போது இந்தியாவிற்கு என வெளியான பட்டியலை தான் பார்க்கப் போகிறோம்.


Indians google sarching history 2022

FIFA உலகக் கோப்பை 2022 மற்றும் ஐபிஎல் இந்தியாவில் ட்ரெண்டிங் ஆன தலைப்புகளுக்கு வரும் போது, கோவிட்-19ஐ விட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களை அறிந்துக் கொள்வதில் தான் மக்கள் ஆர்வம் காட்டி இருக்கின்றனர்.

அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் FIFA உலகக் கோப்பை 2022 மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆகிய இரண்டு போட்டிகள் இந்தாண்டில் அதிக தேடப்பட்டவையாக இருந்திருக்கிறது.


அதிகம் தேடப்பட்ட நபர்கள் 

2022 டிரெண்டிங் தேடலில் முதலிடத்தில் இருப்பது ஐபிஎல் தான், இரண்டாவது இடத்தில் கோவின் ஆப் மற்றும் மூன்றாவது இடத்தில் ஃபிஃபா உலகக் கோப்பை இருக்கிறது. 2022 இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரண்டாவது இடத்திலும் பிரதமர் ரிஷி சுனர் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து தொழிலதிபர் லலித் மோடி, நடிகை சுஷ்மிதா சென் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

நாட்கள் ஓடியதே தெரியவில்லை 

நாட்கள் ஓடியதே தெரியவில்லை என குறிப்பிடும் அளவிற்கு 2022 ஆம் ஆண்டு ஓடி விட்டது. இன்னும் சில தினங்களில் 2023 இல் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். 2022 ஆம் ஆண்டின் Google Play இல் சிறந்து விளங்கிய பயன்பாடுகளை கூகுள் அறிவித்துள்ளது. Turnip – Talk, chat மற்றும் stream ஆகியவை Fun ஆப்ஸ்களாக இருக்கிறது. அதேபோல் தனிப்பட்ட வளர்ச்சிக்கான சிறந்த ஆப் என்ற பட்டத்தை Filo: Instant 1-to-1 tutoring பெற்றிருக்கிறது.

Indians google sarching history 2022

ஸ்டோர் விருது வென்றவர்கள் 

கூகுள் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஷாப்ஸி ஷாப்பிங் ஆப் அதாவது சிறந்த தினசரி அத்தியாவசிய ஆப் என்ற பட்டத்தை பெற்றது. மூத்த குடிமக்கள் பயன்பாடு நன்மைக்கான சிறந்த பயன்பாடாக கியாஸ் இருக்கிறது. சமீபத்தில் ஆப்பிள் தனது 2022 ஆம் ஆண்டிற்கான ஆப் ஸ்டோர் விருது வென்றவர்களை அறிவித்தது

கூகுள் ப்ளே

இந்த ஆண்டுக்கான கூகுள் ப்ளேயின் சிறந்த விருது வென்றவர்களை கூகுள் இந்தியா அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களுக்கான சிறந்த பயன்பாடாக கூகுள் ப்ளே ஸ்டோர் இருக்கிறது. சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பல பயனர்களுக்கு 2022 என்பது தொற்றுநோயின் பிந்தைய காலத்தை குறிக்கிறது என கூகுள் குறிப்பிட்டுள்ளது.

 

Indians google sarching history 2022

சிறந்த பயன்பாடுகள் எது

2022 ஆம் ஆண்டின் கூகுள் ப்ளே சிறந்த பயன்பாடுகளை கூகுள் அறிவித்துள்ளபடி, டர்னிப் – பேச்சு, சேட் மற்றும் ஸ்ட்ரீம் ஆகிய சிறந்த ஃபன் ஆப்ஸ்களாக இருந்திருக்கிறது. அதே நேரத்தில் ‘Filo: Instant 1-to-1 tutoring’ தனிப்பட்ட வளர்ச்சிக்கான சிறந்த ஆப் என்ற பட்டத்தை வென்றிருக்கிறது. ஷாப்ஸி ஷாப்பிங் ஆப் – ஃபிளிப்கார்ட் சிறந்த அத்தியாவசிய செயலி என்ற தலைப்பை பெற்றிருக்கிறது. மூத்த குடிமக்களுக்கான சிறந்த பயன்பாடாக கியால் இருக்கிறது.

 

2022 Google இல் இந்தியர்கள் அதிகம் தேடிய திரைப்படங்கள்!

இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் 2022 இன் பட்டியலை Google வெளியிட்டுள்ளது. பல மொழிகளின் திரைப்படங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இதில் பெரும்பாலானவை பிரபலமான திரைப்படங்கள் தான். இந்த பட்டியலில் ஒரு ஒரு தமிழ் படம் மட்டும் இடம்பிடித்திருக்கிறது.

 

Top searching indian movies in google 2022

திரைப்பட ரசிகர்களுக்கு அற்புதமான ஆண்டு 

இரண்டு வருடங்களாக திரையரங்குகள் மூடிய நிலையில் 2022 என்பது திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைந்தது. லாக்டவுன் இல் பல நல்ல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. அடடா இந்த திரைப்படம் மட்டும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் வேற லெவல் வரவேற்பு கிடைத்திருக்கும் என பல படங்கள் விமர்சனங்களை பெற்றன

 

கூகுள் பட்டியலில் இடம்பெற்ற திரைப்படங்கள் 

அதன்படி லாக் டவுன் முடிந்து இந்த ஆண்டு திரையரங்குகள் திறக்கப்பட்டு அதில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. திரை ரசிகர்களுக்கு இந்த ஆண்டு வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஏணைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும், கூகுளில் அதிக பேர் தேடிய திரைப்படங்களின் பெயர் குறித்த தகவலை கூகுள் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் பல மொழி படங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து படங்களும் பிரபலமான திரைப்படமாக தான் இருக்கிறது. இதில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என ஒரு தமிழ் படமும் இருக்கிறது.

 

கூகுள் 2022 இல் அதிகம் தேடப்பட்ட திரைப்படம்

2022 ஆம் ஆண்டு திரைப்படத் துறைக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது. இரண்டு ஆண்டுகள் இயங்காமல் இருந்து திரையரங்குகள் இந்த ஆண்டு தான் ஓபன் ஆகின. கூகுளில் அதிகம் தேடிய திரைப்படங்களின் பட்டியல் குறித்து பார்க்கையில், இதில் முதல் இடத்தில் இருப்பது ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் நடித்த பிரம்மாஸ்திரா இருக்கிறது. அமிதாப் பச்சன், ஷாருக் கான், நாகார்ஜுனா, ஆலியா பட், ரன்பீர் கபூர் என பல முக்கிய புள்ளிகள் நடித்த Brahmastra: Part One – Shiva இதில் முதல் இடத்தில் இரு்கிறது. இந்த திரைப்படம் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

Top searching indian movies in google 2022

K.G.F: Chapter 2 

இரண்டாவது இடத்தில் இருப்பது K.G.F: Chapter 2. முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற கேஜிஎஃப் இன் இரண்டாம் பாகமாக வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் அமோக வரவேற்பை பெற்றது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம். கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பெருமை இந்த படத்திற்கு இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

Top searching indian movies in google 2022

The Kashmir Files

அடுத்த இடத்தில் இருப்பது The Kashmir Files திரைப்படமாகும். சமீப காலமாக பல விவாதங்களுக்கு இந்த திரைப்படம் உட்படுத்தப்பட்டு வருகிறது. விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தி காஷ்மீர் ஃபைலஸ் ஆகும். 90களின் முன் காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம்.


Top searching indian movies in google 2022

RRR

பிரமாண்ட இயக்குனர் பாகுபலி படைப்பாளர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் RRR. இந்த திரைப்படம் உலகளவில் வசூல் வேட்டை புரிந்தது. ஜுனியர் என்டிஆர், ராம் சரன், ஆலியா பட் ஆகியோரின் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வெளியான திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். இந்த படம் இந்தாண்டில் வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை விவாதம் நடந்து வருவதாகவும் இயக்குனர் ராஜமௌலி குறிப்பிட்டார். இந்த படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

 

Top searching indian movies in google 2022

Kantara

சைலண்டாக குறைந்த பட்ஜெட் இல் வெளியாகி நாடு முழுவதும் அமோக வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் காந்தாரா. கன்னட மொழியில் வெளியான இந்த திரைப்படம் அடுத்தடுத்து பல மொழிகளில் வெளியானது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ரூ.16 கோடியில் தயாரான இந்த திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருகிறது. இந்த திரைப்படமும் கூகுளில் அதிகம் தேடிய படங்களின் பட்டியலில் இருக்கிறது. Kantara படத்தை அமேசான் பிரைம் இல் பார்க்கலாம்.


Top searching indian movies in google 2022

Pushpa:

The Rise அடுத்த இடத்தில் இருக்கும் திரைப்படம் Pushpa: The Rise ஆகும். நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான இந்த படம் கூகுளில் அதிக தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.

Top searching indian movies in google 2022

Vikram

கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சக்கப்போடு போட்ட விக்ரம் படம் இந்த பட்டியலில் இருக்கிறது. இந்த ஆண்டு பல தமிழ் திரைப்படங்கள் வெளியானாலும் கூகுளில் அதிக தேடிய திரைப்படங்களில் இடம்பிடித்த ஒரு தமிழ் திரைப்படம் Vikram தான்.

Top searching indian movies in google 2022

Laal Singh Chaddha, Drishyam 2, Thor: Love and Thunder

Laal Singh Chaddha திரைப்படமும் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. ஆமிர் கான் நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. மலையாளத்தில் மோகன் லால், தமிழில் கமல் ஹாசன், இந்தியில் அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்த த்ரிஷ்யம் (பாபநாசம்) படத்தின் இரண்டாம் பாகம் தான் Drishyam 2. இந்த படம் கூகுள் தேடல் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. அடுத்த இடத்தில் இருப்பது Thor: Love and Thunder. மார்வல் வரிசையில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது அதேபோல் தான் இந்திய ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது. கூகுள் தேடல் பட்டியலில் இடம்பெற்ற டாப் 10 இடத்தில் இது கடைசி இடத்தில் இருக்கிறது.

Tags: indians searching by google history 2022

Post navigation

❮ Previous Post: எந்த ஒரு சைடு பட்டன் இல்லாமல் ஒரு போனா !!ஆமாங்க இதோ வருகிறது ஆப்பிள் iphone15!!
Next Post: குறைந்த விலையில் Apple போன் மற்றும் Apple டிவி வாங்க ஆசையா! உங்களுக்கான நேரம் இது!மிஸ் பண்ணிராதீங்க!! ❯

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 TECHBUDDIESS .

Theme: Oceanly by ScriptsTown