கூகுள் தேடலில் நீங்கள் செய்த ஒரு தவறு உங்களைச் சிறையில் தள்ளும்.
ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தைத் தேடும்போது, உங்கள் IP முகவரி நேரடியாகப் பாதுகாப்பு நிறுவனங்களைச் சென்றடையும்.
ஹேக்கிங் தொடர்பான தகவல்களைப் பெற முயற்சித்தால் அரசாங்கத்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
முதலில் கூகுளில் நீங்கள் பார்க்கும் அனைத்து வலைத்தளங்களையும் கூகிள் உருவாக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் வலைத்தளங்களைத் தேடிப்பிடித்து வழங்கும் ஒரு ஆன்லைன் தளமாக மட்டுமே கூகுள் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். கூகுளில் தேடவே கூடாத பொதுவான விஷயங்கள் மற்றும் இதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

இப்போதெல்லாம் எதைப் பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எல்லோரும் முதலில் செல்வது கூகுளுக்கு தான். இண்டர்நெட் மட்டும் இருந்தால்போதும், நீங்கள் தேடும் விஷயங்களை நொடிப் பொழுதில் google கொண்டு வந்து உங்களிடம் சேர்த்துவிடும். சுருங்கச் சொன்னால், கூகுளில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். தெருவின் முகவரி முதல் விண்வெளி ரகசியம் வரை என அனைத்து தகவல்களும் கூகுளில் இருக்கின்றன.
இன்றைய காலக்கட்டத்தில், நம்மில் பெரும்பாலானோர், நமக்குள் எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஆன விடையை கூகுளில் தேடுகிறோம். அன்றாட செய்திகள், நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் என அனைத்தையும் வழங்கும் தகவல் களஞ்சியமாக இருக்கும் கூகுள், நமக்கு தகவல்களை அள்ளித் தரும் தளமாக இருக்கிறது. கூகுள் நிறுவனத்திடம் எந்த கேள்வி கேட்டாலும், அது உடனடியாக பதிலளிக்கும். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காவும், குற்றங்களை தடுக்கும் நோக்கத்திற்காகவும், தொழில்நுட்ப விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கூகுளில் நீங்கள் நினைப்பதை எல்லாம தேட முடியாது. எல்லா கேள்வியையும் உங்களால் கேட்க முடியாது. கூகுளில் சில கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிவது உங்களை சிக்கலில் தள்ளலாம். கூகுளில் எந்த விஷயங்களை தேடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் அறிந்து கொள்ளலாம்.
ஆனால், இப்படிப்பட்ட கூகுளில் சில விஷயங்களை தேடுவதற்கு தடை இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. இந்த விஷயங்களை நீங்கள் தேடும்போது, சிறைக்கு செல்லக்கூட வாய்ப்புகள் உள்ளன. என்னென்ன விஷயங்களை நீங்கள் தேடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கூகுள் தேடல்களில் பல விஷயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கலாம். Google இல் ஏதேனும் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தைத் தேடும்போது, உங்கள் IP முகவரி நேரடியாகப் பாதுகாப்பு நிறுவனங்களைச் சென்றடையும். கூகுள் தேடலில் நீங்கள் செய்த ஒரு தவறு உங்களைச் சிறையில் தள்ளும். இதனால் கூகுள் தேடலில், நீங்கள் தேடக் கூடாத சில விஷயங்கள், இதற்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கும் முறை:
வெடிகுண்டுகள் அல்லது துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கும் முறையைப் பற்றிய தகவல்களை நீங்கள் கண்டுபிடிக்க முயற்சித்தால், நீங்கள் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் பற்றிய தகவல்களைப் பெறுவது போன்ற தேடல்களை இந்திய அரசாங்கம் கண்காணித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து, அரசு இதை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.

குழந்தைகள் தொடர்பான குற்றங்கள்:
கூகுள் தேடலில் குழந்தை குற்றங்கள் தொடர்பான எந்த தகவலையும் பெற விரும்பினால் சிக்கலை சந்திக்க நேரிடும். ஏனெனில் குழந்தை குற்றங்களுக்கு மிகவும் கடுமையான விதிகள் உள்ளன, மேலும் இது தொடர்பான தகவல்களை பெற விரும்பினால், நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும்.
வீடியோ பைரஸி:
ஒரு புதிய திரைப்படம் அல்லது பாடல் இணைப்பைத் தேடுகிறீர்களானால், அதனாலும் சிக்கல் ஏற்படலாம். இது புதிய படங்கள் தொடர்பான வீடியோக்களை முதலியவற்றைச் சட்டத்திற்கு மாறாக பிரதி எடுக்கும் குற்றச் செயலின் கீழ் வருவதால், நீங்கள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில் இதுபோன்ற தலைப்புகளில் தேடுவதைத் தவிர்க்கவும்.
ஹேக்கிங்:

பெரும்பாலானோர் ஆர்வம் காரணமாக ஹேக்கிங் பற்றி அறிய விரும்புகிறார்கள், அவர்கள் கூகிள் தேடலில் ஹேக்கிங் தொடர்பான தகவல்களைப் பெற முயற்சித்தால் அரசாங்கத்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹேக்கிங் போன்ற முக்கியமான தலைப்புகளில் தகவல்களைப் பெற முயற்சிக்காமல் இருப்பது நல்லது.
குறிப்பு: கூகுள் தேடலை நீங்கள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் நாங்கள் இங்கே குறிப்பிடும் விஷயங்களைப் போல கூகிளில் தேட தடை விதிக்கப்பட்டுள்ள பல விஷயங்கள் உள்ளன. சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்ய முயற்சிக்கும் வகையிலான தேடல்கள் இருந்தால், அரசாங்கம் அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். எனவே இது போன்ற தவறைகளை தவிர்த்தால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
ஆபாச படங்கள்:
கூகுளில் ஆபாச தளங்களைப் பார்ப்பவர்கள் ஏராளம். ஆனால் குழந்தைகளின் ஆபாசங்கள் தொடர்பான விஷயங்களை நீங்கள் ஒருபோதும் தேடக்கூடாது. ஏனெனில் இந்தியாவில் இது தொடர்பாக சட்டம் உள்ளது. POCSO சட்டம் 2012, 14-ன் கீழ், குழந்தைகளின் ஆபாசத்தைப் பார்ப்பது, உருவாக்குவது மற்றும் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த விஷயத்தில் உங்கள் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்காக 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவீர்கள்.
மேலும் கீழ் கூறும் சில விஷயங்களை google-லில் தேடவேண்டாம்:
கருக்கலைப்பு:
கருக்கலைப்பு என்று கூகுளில் தேடவே கூடாது. ஏனென்றால் இந்தியாவில் முறையான மருத்துவரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தால் அது சட்டவிரோதமானது. கூகுளில் இது தொடர்பான தகவல்கள் இருந்தாலும், அந்த தகவல்கள் உங்களை சிக்கலுக்கு அழைத்துச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. பிறருக்கும் இந்த தகவலை தெரிவிப்பது நல்லது.
ஆன்லைன் வங்கி ஆபத்து:
உங்கள் வங்கியின் ஆன்லைன் வங்கி வலைத்தளங்களைத் Google இல் தேடுவதைத் தவிர்க்கவும். பிஷ்ஷிங் (phishing) செய்வதற்கான வாய்ப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதால், வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் போல் தோற்றமளிக்கும் போலி வலைத்தளத்தில், உங்கள் வங்கியின் உள்நுழைவு ஐடி மற்றும் பாஸ்வோர்டை என்டர் செய்வதனால் சிக்கலில் சிக்கிகொள்வீர்கள்.
கஸ்டமர் கேர் எண்கள் மூலம் ஆபத்து:
கூகிளில், நிறுவனங்களின் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை ஒருபோதும் தேட வேண்டாம். மோசடி செய்பவர்கள், மோசடி செய்வதற்கான அசல் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள் போன்ற போலி எண்களை வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் வலைக்குள் வீணாய் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
ஆப்ஸ் டவுன்லோட் மூலம் ஆபத்து
உங்களுக்குத் தேவையான ஆப்ஸ்களை டவுன்லோட் செய்ய, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்து ஆப்-களை டவுன்லோட் செய்யுங்கள். மால்வேர் உடன் கூடிய ஆப்களை டவுன்லோட் செய்வதற்கான வாய்ப்பு கூகுள் தளத்தில் உள்ளது. இதுபோன்ற சிக்கலில் சிக்காமல் தப்பித்துக்கொள்ளுங்கள்.
கூகிளில் மருந்துகள் அல்லது மருத்துவ அறிகுறிகளை ஒருபோதும் தேட வேண்டாம். அது உங்களின் உயிருக்கே ஆபத்தாய் மாறிவிட கூடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, மருத்துவரை அணுகுவதே சிறந்தது. ஆன்லைன் இல் மருந்துகளை நீங்கலாக ஆர்டர் செய்வதையும் தவிர்த்துவிடுங்கள். மருத்துவ அறிகுறிகள் அனைத்தும் கூகுளில் துல்லியமாக இருக்காது என்பதை நினைவில் வையுங்கள்.
தனிப்பட்ட நிதி மற்றும் பங்குச் சந்தை ஆபத்து:
ஆரோக்கியத்தைப் போலவே, தனிப்பட்ட நிதி ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது, அனைவரையும் பணக்காரர்களாக மாற்றும் ஒரு முதலீட்டுத் திட்டம் ஒருபோதும் இருக்க முடியாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். எனவே, முதலீடு செய்யும் போது கூகிள் தேடல் முடிவுகளிலிருந்து ஆலோசனையைப் பெறுவதைத் தவிர்த்துவிடுங்கள்.
அரசாங்க வலைத்தளங்கள் மூலம் ஆபத்து:
வங்கி வலைத்தளங்களைப் போலவே, நகராட்சி வரி, மருத்துவமனைகள் போன்ற அரசாங்க வலைத்தளங்கள் தான், மோசடி செய்பவர்களின் பிரதான இலக்குகளாகும். எனவே சரியான URL உங்களுக்குத் தெரிந்தால் நேரடியாக அந்த தளங்களுக்குச் செல்லுங்கள். போலியான மோசக்காரர்களின் வலைத்தளங்களில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
சமூக வலைத்தள லாகின் ஆபத்து:
சமூக வலைத்தள அக்கௌன்ட்களை கூகிளில் இருந்து லாகின் செய்யாதீர்கள். சமூக வலைத்தள ஆப்-கள் மூலம் எப்போதும் லாகின் செய்ய அறிவுறுத்தப்படுகிறது, கூகுள் மூலம் லாகின் செய்வது ஃபிஷிங்கிற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.