Skip to content
Techbuddiess

TECHBUDDIESS

Technology | Gadgets | Affiliate Marketing | Digital Marketing

  • MOBILES
  • TV
  • COMPUTERS & LAPTOP
  • GADGETS
  • CINEMA NEWS
  • Home
  • 2022
  • October
  • 13
  • இனி youtube-ல் 4k வீடியோக்களை பார்க்க பணம் கட்டுணுமா!!! Youtube-ன் அதிரடி திட்டம்!!
youtube premium

இனி youtube-ல் 4k வீடியோக்களை பார்க்க பணம் கட்டுணுமா!!! Youtube-ன் அதிரடி திட்டம்!!

Posted on October 13, 2022October 13, 2022 By admin No Comments on இனி youtube-ல் 4k வீடியோக்களை பார்க்க பணம் கட்டுணுமா!!! Youtube-ன் அதிரடி திட்டம்!!
NEWS

பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் இருக்கும் சமூக வலைதளங்களில் யூடியூப் தளமும் ஒன்று. இதில் நமக்கு தர்ம சங்கடம் தரும் பிரச்சனை என்னவென்றால் 10 நிமிட வீடியோ பார்ப்பதற்குள் குறுக்கே வந்து செல்லும் 3 அல்லது விளம்பரங்கள் தான். அதை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சந்தா தொகை கட்டி ப்ரீமியம் பயனாளர் என்ற தகுதியை அடைய வேண்டும்.
சரி, விளம்பரங்கள் தானே, வந்தால் வந்துவிட்டு போகிறது. அதை சேர்த்து வீடியோ பார்ப்போம் என்றுதான் நீங்கள் இதுவரையிலும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். இனி அந்த எண்ணத்திற்கும் வேட்டு வைக்கும் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது யூடியூப் நிறுவனம்.

youtube premium

அதாவது, நீங்கள் 4கே தரத்தில் வீடியோ பார்க்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு ப்ரீமியம் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்று யூடியூப் நிறுவனம் அறிவுறுத்துகிறதாம். இந்த நிபந்தனை குறித்து யூடியூப் நிறுவனம் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆனால், பயனாளர்கள் 4கே வீடியோவை பார்க்க முயன்றபோது இத்தகைய நிபந்தனை அவர்களது ஸ்கிரீனில் தோன்றியதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ரெடிட் சமூக வலைதளத்தில் இதுதொடர்பான புகாரை பயனாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து ரெடிட் பயனாளர் ஒருவரின் பதிவில், 4கே வீடியோ பார்க்க முயன்றபோது, “ப்ரீமியம் – அப்கிரேட் செய்ய டேப் செய்யுங்கள்’’ என்ற வாசகம் ஸ்கீரினில் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது, இதன் அர்த்தம் என்னவென்றால் இனியும் நீங்கள் 4கே தரத்திலான வீடியோக்களை இலவசமாகப் பார்க்க இயலாது.
உங்களுக்கு வேண்டுமானால் 1440பி அல்லது 2கே தரத்திலான வீடியோக்களை பார்த்துக் கொள்ளலாம். இலவசமாக கிடைக்கும் அதிகப்பட்ச தரத்திலான வீடியோக்கள் இந்த வகையைச் சார்ந்தவை தான்.
யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படும்?
சாதாரணமாக நாம் மொபைலில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு இந்த 4கே தரம் தேவைப்படாது. ஆனால், டிவி உள்ளிட்ட பெரிய திரைகளில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக 4கே தரம் இருந்தால் தான் பிக்சர் உடையாமல் தெளிவாக தெரியும்.

இதுவரையிலும் 4கே தரத்தில் பெரிய ஸ்கிரீனில் வீடியோ பார்த்து வந்தவர்களுக்கு யூடியூபின் இந்த நடவடிக்கை நிச்சயம் அதிர்ச்சி தருவதாக அமையும். குறிப்பாக ஹெச்டி தரத்தில் வீடியோ பாடல் மற்றும் படங்களை பார்க்க நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சலாம்.

youtube premium

யூடியூப் ப்ரீமியம் எவ்வளவு :
மாதத்திற்கு ரூ.129 அல்லது 3 மாதங்களுக்கு ரூ.399 அல்லது ஓராண்டுக்கு ரூ.1,290 என்ற அடிப்படையில் யூ டியூப் ப்ரீமியம் வழங்கப்படுகிறது. நீங்கள் ப்ரீமியம் வாடிக்கையாளர் என்றால் உங்களுக்கு விளம்பர இடையூறுகள் இன்றி வீடியோ பார்க்கும் வசதி கிடைக்கும். இது தவிர பிக்சர் – இன் – பிக்சர் பிளேபேக் வசதி, யூடியூப் ப்ரீமியம் மியூஸிக் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். வீடியோக்களை டவுன்லோடு செய்து ஆஃப்லைனிலும் பார்த்துக் கொள்ளசமீபகாலமாக யூடியூப் உள்ள வாடிக்கையாளர்களை சந்தா கணக்கிற்கு மாற்றுவதற்கு யூடியூப் நிறுவனம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. வீடியோக்களில் அதிக விளம்பரங்களை வைப்பது, விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க வேண்டுமென்றால் பணம் கொடுத்து சந்தாவில் இணையும்படி சொல்வது உள்ளிட்ட விஷயங்கள் அரங்கேறி வருகின்றன.லாம்.

அண்மையில் 5 விளம்பரங்களை தொடர்ச்சியாக, தவிர்க்கவே முடியாதபடி வீடியோவில் கொண்டு வருவதற்கு யூடியூப் சோதனை செய்தது. ஆனால், இதற்கு பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், 5 விளம்பரங்கள் என்ற கருத்தை யூடியூப் கைவிட்டது.இந்த நிலையில், தற்போது வீடியோ தரத்தில் கை வைத்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ தரம் குறித்து ஒரு ஸகிரீன்ஷாட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, 4K வீடியோ தரத்தில் தேர்வு செய்யும்பட்சத்தில், பிரீமியம் சந்தா செலுத்தும்படி கேட்கிறது.
இவ்வாறு அதிக துல்லியமான வீடியோவை பார்ப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது ஏற்கெனவே ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல வீடியோ தளங்களில் உள்ளது. அதே யுக்தி தற்போது யூடியூப்பிலும் கொண்டு வருவதற்கான சோதனை நடைபெறுகிறது

youtube premium

அதிக துல்லியத்தன்மையுடன் வீடியோவை பார்க்க வேண்டுமென்றால் பணம் செலுத்தி பிரீமியம் சந்தாவில் இணைய வைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஏற்கெனவே 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இனி வரும் காலங்களில் பெரும்பாலானோர் 4K தரத்திலான வீடியோவுக்கு தான் முக்கியத்துவம் அளிப்பர். இதனால், 4K கட்டண முறை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் அனைத்து வகையான வீடியோக்களையும் பார்க்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட யூடியூப், தனது வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இத்தளத்தில் பதிவு செய்யப்படும் விளம்பரங்கள் மூலமாக அது தனது வருவாயை ஈட்டுகிறது.
கட்டணம் செலுத்தி விளம்பரம் இல்லாத வீடியோக்களை கண்டுகளிக்கும் வகையில் ஏற்கனவே நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. 

4k வீடியோக்களை download செய்வது எப்படி?

முதலில், இந்த வேலை யூடியூப்பின் கொள்கைக்கு எதிரானது என்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். YouTube அதன் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு விளம்பரமில்லாத அனுபவத்தை வழங்குகிறது மற்றும் வீடியோக்களை ஆஃப்லைனில் சேமிக்க அனுமதிக்கிறது, ஆனால் நீங்கள் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், நீங்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் அல்லது சாஃட்வெர் பயன்படுத்த வேண்டும். எனவே முதல் விஷயம் என்னவென்றால், உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் டெஸ்க்டாப்பிற்காக 4K வீடியோ டவுன்லோடரை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
சாஃட்வெர் இன்ஸ்டால் செய்யப்பட பிறகு, பிரவுசர் YouTube ஐ திறக்கவும்.
இப்போது நீங்கள் டவுன்லோடு செய்ய விரும்பும் வீடியோவைத் தேடுங்கள்.
வீடியோவின் URL ஐ காப்பி செய்யவும்..
இப்பொழுது 4K Video Downloader அதைத் திறந்து இணைப்பை ஒட்டவும்.
இப்போது வீடியோ டவுன்லோடர் சில நொடிகளில் வீடியோ தகவலைக் காண்பிக்கும்.
இப்போது “Download Video” யின் விருப்பத்தில் க்ளிக் செய்யவும்.
வீடியோ பதிவிறக்கத்தின் போது வீடியோவிலிருந்து ஆடியோவை அகற்றுவதற்கான விருப்பத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
வீடியோவைப் பதிவிறக்குவதற்கு முன்பு வீடியோவின் தரத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்த பிறகு Download என்பதைக் கிளிக் செய்யவும். சிறிது நேரத்தில் வீடியோ பதிவிறக்கம் செய்யப்படும்.

how to youtube premium videos download
Tags: youtube premium news

Post navigation

❮ Previous Post: iphone வாங்க நினைப்பவர்களுக்கு பிளிப்கார்ட் தரும் தீபாவளி ஆஃபர்!!! மிஸ் பண்ணாதீங்க!!!
Next Post: உங்க ஃபோனை ஹேக் பண்ணி இருந்தாங்கனா இதெல்லாம் நடக்கும்! தெரிஞ்சுக்கோங்க! ❯

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 TECHBUDDIESS .

Theme: Oceanly by ScriptsTown