பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை அக்டோபர் 11 முதல் தொடங்க இருக்கிறது. இந்த விற்பனையானது அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 16 வரை நடக்கிறது. இந்த பண்டிகை கால விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக ஐபோன்கள் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தீபாவளி போனஸ் பணத்தில் புதிய போன் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரம்.
பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை
பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்குகிறது என்றாலும் அதன் பிளஸ் உறுப்பினர்களுக்கு இன்று முதல் இந்த சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சலுகை தினங்களிலும் நடக்கும் சராசரியான ஒன்றுதான் இது.
பிக் தீபாவளி விற்பனையில் ஐபோன் மாடல்கள் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. பிளிப்கார்ட் நிறுவனம் பிக் தீபாவளி விற்பனையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) உடன் கூட்டு சேர்ந்து 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை வழங்குகிறது
ஐபோன் 13க்கு ஆர்வம் செலுத்தும் இந்தியர்கள்
ஆப்பிள் ஐபோன் 14 அறிமுகம் செய்த பிறகும் பெரும்பாலான மக்கள் ஐபோன் 13ஐ ஆர்டர் செய்வதில் தான் கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக இந்தியர்கள் ஐபோன் 13 வாங்குவதில் தான் கவனம் செலுத்துகின்றனர். காரணம் ஐபோன் 14ஐ விட மலிவு விலையில் ஏறத்தாழ அதே அம்சங்களுடன் ஐபோன் 13 கிடைக்கிறது.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் ஐபோன் 13 ரூ.47,000க்கு கிடைத்தது. ஆனால் இந்த சலுகை சின நொடிகளில் முடிவடைந்தது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஐபோன் 13 விலை குறைப்பு
பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் இந்த வாய்ப்பை தவறவிட்டிருந்தால் இது உங்களுக்கு சரியான நேரமாகும். ஆனால் அந்த அளவிற்கு தள்ளுபடியை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் அசல் விலையை விட ஒப்பீட்டளவில் மலிவானதாக இருக்கிறது.
ஐபோன் 14 அறிமுகம் செய்த உடன் ஆப்பிள் ஐபோன் 13 விலை கிட்டத்தட்ட ரூ.10,000 குறைக்கப்பட்டது. இதன்பின் ஐபோன் 13 இந்திய விலை ரூ.69,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

உடனடி தள்ளுபடி அறிவிப்பு
பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ஐபோன் 13 சுமார் ரூ.57,000 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதில் 10 சதவீத வங்கி சலுகைகளும் அடக்கம்.
எஸ்பிஐ டெபிட் கார்ட் உள்ள அனைவரும் இந்த 10 சதவீத தள்ளுபடியை பெறலாம். ஐபோன் 13 போன்றே பிற ஆப்பிள் ஐபோன் மாடல்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
இந்த விலையில் ரெண்டு ஐபோன் வாங்கலாம்..
பிளிப்கார்ட்டில் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 11 ஆகிய மாடல்களும் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 மினி ஆகிய இரண்டும் சுமார் ரூ.33,000 விலையில் கிடைக்கிறது. இதுவும் வங்கி சலுகையை உள்ளடக்கியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா?
ஐபோன் 13 இல் 6.1 இன்ச் 60 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி திரையில், 12 எம்பி செல்பி கேமரா மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார்கள் உள்ளன. இது A15 பயோனிக் சிப் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மாடலின் பின்புறத்தில் 12MP டூயல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
ஐபோன் 13 வாங்குவதே சிறந்ததா?
ஐபோன் 14 ஆனது ரூ.79,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் முந்தைய ஐபோன் 13 இல் இருக்கும் அதே ஏ15 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெரிய பேட்டரி மற்றும் கூடுதல் ஜிபியூ கோர் ஆகியவை இருக்கிறது. வடிவமைப்பில் தொடங்கி பெரும்பாலான அம்சங்கள் ஐபோன் 13 போன்றே இருக்கிறது. எனவே செலவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஐபோன் 13 வாங்குவதே சிறந்த தேர்வாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 13 மற்றும் 14 அம்சங்கள்
ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூபப்ர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது.
நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா.
ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 14 சீரிஸ் இல் இதுவரை கண்டிராத சிறந்த பேட்டரி ஆதரவை ப்ளஸ் மாடல் கொண்டிருக்கிறது. ஐபோன் 14 இல் 19 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம். சிறந்த பேட்டரி ஆயுள் வழங்குவதற்கு என இந்த மாடல்களில் ஆப்பிள் கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது.
பிற பெரும்பாலான அம்சங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

ஐபோன் 13 அம்சங்கள் (iPhone 13 Specifications)
ஐபோன் 13 ஸ்மார்ட்போனில் 6.1″ இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே 2532×1170 பிக்சல் ரெசலியூஷனில் கொடுக்கப்பட்டுள்ளது. செராமிக் கொண்டு டிஸ்ப்ளே பாதுகாக்கப்பட்டுள்ளது. iOS 13 இயங்குதளம் இதில் நிறுவப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏ15 பயோனிக் சிப்செட் இந்த போனை இயக்குகிறது. இதை சக்தியூட்ட 3,227mAh பேட்டரியும், அதனை ஊக்குவிக்க 20W வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இதில் உண்டு.
அசத்தல் சினிமா தர கேமராக்களை ஐபோன் 13 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதில் பல விதமாக படங்களை எடுக்க முடியும். மேலும், 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.0, என்.எஃப்.சி, ஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவும் அடங்கியுள்ளது.

ஐபோன் 14 பிளஸ் அம்சங்கள்
6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (எக்ஸ்டிஆர்) டிஸ்ப்ளே இந்த வேரியண்டில் 128ஜிபி சேமிப்பகத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோன் A15 பயோனிக் சிப்பில் வேலை செய்கிறது. டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இவை இரண்டும் 12MP சென்சார்களைக் கொண்டுள்ளன. ஐபோன் 14 (https://zeenews.india.com/tamil/technology) பிளஸின் முன் கேமரா 12 எம்.பி. இந்த 5G ஸ்மார்ட்போனில் விரிவாக்கக்கூடிய சேமிப்பிடம் இல்லை. ஆடியோ ஜாக் வழங்கப்படவில்லை. விரைவான சார்ஜிங் ஆதரவு வசதியும் இதில் வழங்கப்படவில்லை.
ஐபோன் 14 பிளஸின் 128 ஜிபி சேமிப்பக வேரியண்ட் மாடலின் அறிமுக விலையை கேட்டால் உங்களுக்கு மலைப்பாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ரூ.89,900 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HDFC வங்கியின் கிரெடிட் கார்டை வாங்கும் போது பயன்படுத்தினால், ரூ.2,750 தள்ளுபடி கிடைக்கும். அதாவது iPhone 14 Plus-ன் விலை ரூ.87,150 ஆக குறைந்துவிடும்.